மழைநீர் சேகரிப்பு

1.பெரிய பண்ணைக்குட்டை:

மழைநீர் சேகரிப்பு வழிந்தோடும் மழை நீரை சேமிக்க விளை நிலங்களில் பண்ணைக்குட்டை அமைத்தல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இயற்கையின் சவால்களான வெள்ள தேசம் மற்றும் வறட்சியினை சமாளிக்கும் மிகச் சிறந்த எளியமுறைதான் பண்ணைக்குட்டை அமைப்பது. இதற்கு அனைத்து நில உடைமைதாரர்களான விவசாயிகளின் பங்களிப்பு அவசியமானதாகும். பண்ணைக் குட்டைகளை ஒரு ஏக்கர் அல்லது கால் ஏக்கர் நிலத்தில் 1.5 மீட்டர் ஆழத்துக்கு வெட்ட வேண்டும். சமமான நிலங்களில் வரப்பு ஓரங்களிலோ அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு உள்ள நிலங்களில் தாழ்வான பகுதியை அறிந்து வெட்ட வேண்டும். இதனை குறைந்த செலவில் அமைக்க நவீன இயந்திரங்களை பயன்படுத்தினால் நல்லது . நிலமானது ஈரப்பதம் குறைவான நிலையில் மழைபெறும்போது 50 மி.மீட்டர் முதல் 100 மி.மீட்டர் மழையினைத் தானே எளிதில் உறிஞ்சிக்கொள்ளும். அதற்கும் மேலாக மழை பெய்தால் ஒரு ஏக்கர் பரப்பளவில் மண் கண்டம் நனைந்த பிறகு வழிந்தோடும் 15 மி.மீட்டர் மழை நீரை ஒரு சென்ட் பரப்பளவிலான பண்ணைக் குட்டை ஒரு தடவையில் பிடித்துக் கொள்ளும். மண்ணின் தன்மைக்கேற்ப பண்ணைக்குட்டையானது ஒரே நாளில் உறிஞ்சிக்கொள்ளும் தடவைகள் ஒன்றுக்கு மேல் ஆகலாம். அதாவது 30 மி.மீட்டர் முதல் 150 மி.மீட்டர் வரையிலான மழை நீரை உள்ளிழுத்துக் கொள்ளும். மாவட்டத்தில் ஒரு ஆண்டில் சராசரியாக 1,300 மி.மீட்டர் மழை பெய்கிறது. அதில் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் கிடைக்கப்பெறும் மழை அளவு சராசரியாக 850 மி.மீட்டர்.

2.சிறிய பண்ணைக்குட்டை

மழைநீர் சேகரிப்பு பண்ணைக் குட்டைகளை ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்பளவில் 1.5 மீட்டர் ஆழத்துக்கு வெட்ட வேண்டும். சமமான நிலங்களில் வரப்பு ஓரங்களிலோ அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு உள்ள நிலங்களில் தாழ்வான பகுதியை அறிந்து வெட்ட வேண்டும். ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் பண்ணைக்குட்டையின் கொள்ளளவு 60 கன மீட்டர் அதாவது 60,000 லிட்டர் ஆகும். இதனை குறைந்த செலவில் அமைக்க நவீன இயந்திரங்களை பயன்படுத்தினால் ரூ.5,000 வரைசெலவாகும்.



1.வீட்டுக்கூரை மழைநீர் சேகரிப்பு:

மழைநீர் சேகரிப்பு மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீர் தரை மட்டத்தில் ஓடி வீணாவதற்கு முன்னதாகவே சேகரித்து அதை கொள்கலன்களில் ஒருங்கே குவித்து வைப்பதாகும். மழைநீரை பூமிக்கடியில் உள்ள பாறைகள் உறிஞ்சுவதற்கு முன்னதாகவே சேகரிப்பதால் அதை பிறகு குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் மட்டும் அல்லாமல் நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்த முடியும். கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தே மழைநீரை சேகரிப்பது ஒரு முறை ஆகும். புல் மற்றும் இலைகள் தவிர உலோகத் தகடுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி மழைநீர் ஓடுவதை தடுத்து நிறுத்தி சேகரிப்பது வழக்கம்.

2.வீட்டுக்கூரை மழைநீர் சேகரிப்பு:

மழைநீர் சேகரிப்பு மழைநீர் சேகரிப்பு வாட்டர் சப்ளை, உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும். உள்ளூர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு பெருமளவு உதவியாக இருக்கும். மழைநீர் சேகரிப்பின் மூலம் நீர் விநியோகம் மற்றும் உணவு பாதுகாப்பு மேம்படும், அது வருவாய் ஈட்டுவதற்கு வழி வகுக்கும்.