oxygen use in body

பிராணாயாமம்

எச்சரிக்கைகள்

பிராணயாமா உத்திகள் கவனத்துடன் பயிற்சி செய்யப்படவேண்டும் என்றும் முன்னேற்றமடைந்த பிராணயாமா உத்திகள் ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதலுடனே பயிற்சி செய்யப்படவேண்டும் என்றும் பல யோகா ஆசிரியர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த எச்சரிக்கைகள் பாரம்பரியமிக்க இந்து இலக்கியங்களிலும் கூட சொல்லப்பட்டிருக்கிறது.

புத்தருக்கு, மூச்சு தியானத்தின் முக்கிய அம்சமாக இருப்பது மூச்சுவிடுதலை கவனிக்கும் உணர்வுநிலை (https://tinybuddha.com/blog/5-breathing-techniques-melt-stress-away/)

பிராணாயாமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

பிராணயாமா உத்திகள் பலதரப்பட்ட மனஅழுத்தம் தொடர்பான ஒழுங்கீனங்களைக் குணப்படுத்துவதில் நலம் பயக்கிறது, தன்னியக்கமுள்ள செயல்பாடுகளை மேம்படுத்துகிறது, ஆஸ்த்துமா நோய்அறிகுறிகளை நீக்குகிறது, மற்றும் உயிர்வளியேற்ற மனஅழுத்த அறிகுறிகளை குறைக்கிறது எனவும் பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிராணயாமாவைப் பயிற்சி செய்வதால் சீரான மனம், உறுதியான மனோதிடம் மற்றும் ஆரோக்கியமான முடிவெடுத்தலை ஏற்படுத்துவதாகவும், நீடித்த பிராணயாமா பயிற்சி வாழ்வை நீட்டிப்பதாகவும்

உணரும் ஆற்றலை மேம்படுத்துவதாகவும் மருத்துவப் பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிராயாணமத்தினால் பொறுமை , சமாளித்தல், சகிப்புத் தன்மை, உடல் வேதனை (வலி) தாங்குதல் , வாழ்க்கைப் போரட்டங்களை தாங்கி நிற்றல். கவலை, கலக்கம், இவைகள் அனைத்திலும் பாதிப்பின்றி வெற்றியடைய மனபலம் பெற, மனமடங்க, மூச்சுக்காற்றை (பிராணனை) அடக்குவதன் மூலம் கிடைக்கிறது. பிராணாயாமம் மூலம் ரத்த சுத்திக்கும், ரத்த சுழற்சிக்கும், ரத்தத்தில் பிராண வாயுவை பாய்ச்சுவதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. மூச்சுப் பயிற்சியின் மூலம் ரத்தத்தில் இருக்கும் அசுத்தங்கள் களையப்பட்டு விடுவதால் தூய ரத்தம் மிகத்தூய்மையான உயிர்காற்றான பிராணவாயுவை சுமந்து சென்று உடலின் நுண்ணிய உறுப்புகளுக்கு உணவாக தருகிறது. பிரணாயாமத்துடன் யோகாசனம் செய்வதால் உடலின் அன்னைத்து பகுதிகளும் வலிமை பெறுகிறது.வயிற்றுக்கோளாறு, ஜீரணக் கோளாறு ஆகியவை மறைந்துவிடும்.

பிரணாயாமம் செய்முறை

பிரணாயாயம் எனும் மூச்சுப் பயிற்சி பயில்பவர், பத்மாசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து, வலது நாசித்துவாரத்தை இடது கை மோதிர விரலால் மூடி, இடது நாசித்துவரத்தின் வழியாக சீராக மூச்சினை உள்ளிழுக்கவேண்டும். அவ்வாறு உள்ளிழுத்த சுவாசக் காற்றினை எவ்வளவு நேரம் நெஞ்சினுள் நிறுத்த முடியுமோ, அவ்வளவு நேரம் நிறுத்த வேண்டும். பின்னர் இடது கை கட்டை விரலால் இடது நாசிதுவாரத்தை மூடிக் கொண்டு, வலது நாசித் துவாரத்தின் வழியாக மெதுவாகும், ஒரே சீராகவும் வெளியிடுதல் வேண்டும். பின்னர் இடது நாசிதுவாரத்தை மூடி வலது நாசி துவாரத்தின் வழியே சீராக மூச்சினை உள்ளிழுத்து, நிலை நிறுத்திய பின்னர், இடது நாசி துவாரத்தின் வழியே சீராக மூச்சினை வெளியிட வேண்டும்.

பிராணாயமத்தின் காலமும் நேரமும் (மாத்திரை = 0.25 second 4 மாத்திரை = ஒரு நொடி )

இடது நாசி வழியாக உள்ளிழுக்கும் சுவாசம் பதினாறு மத்திரைகால அளவும், உள் நிலை நிறுத்தும் கால அளவு அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவும், வலது நாசிவழியாக வெளிவிடும் சுவாசகால அளவு முப்பத்திரெண்டு மாத்திரை கால அளவும் இருக்க வேண்டும் இதனைபோலவே வலது நாசி துவாரத்தில் ஆரம்பித்து இடது நாசி துவாரத்தில் வெளியிட வேண்டும், மீண்டும் சுழற்சியினை தொடரவேண்டும். இவ்விதம் மூச்சுப் பயிற்சி ஒரு நாளில் மூன்று முறை சூரிய உதயம், மதியம், சூரிய அஸ்தமன நேரங்களில் செய்யவேண்டும்.